இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
கட்சியின் பெருந் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கடந்த 8 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடந்த பேச்சு தொடர்பிலும், எதிர்காலச் செயல்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளன என்றும் தெரியவருகின்றது.
Be First to Comment