பாண் மற்றும் சிற்றுண்டி வகைகளின் விலைகளை 10 ரூபாவினால் குறைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 430 இலிருந்து தற்போது ரூ. 160 முதல் 170 வரை குறைக்கப்பட்டுள்ளது .
தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை தடுக்க கோதுமை மாவை அத்தியாவசியப் பொருளாக பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படாது என்ற உத்தரவாதத்தின் பேரில் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை கோழி இறைச்சியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும், நுகர்வோர் விவகார அதிகாரசபை இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Be First to Comment