ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையில் பெண்ணொருவரின் வயிற்றில் இருந்து சுமார் பத்து கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் சுரங்க உபேசேகர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் வைத்தியர் சமந்த சமரவிக்ரம தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சத்திரசிகிச்சையில் கருப்பையில் இருந்து இந்தக் கட்டியை அகற்றியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை 49 வயதுடைய பெண் தம்மைப் பார்க்க வந்ததாக சத்திரசிகிச்சையை மேற்கொண்ட விசேட வைத்திய நிபுணர் சமந்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
வயிற்றில் அளவின் பெரியது மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகவும் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தேவையான ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொண்ட போது, கருப்பையில் கட்டி இருப்பது தெரியவந்ததையடுத்து. ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் நேறறைய தினம் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
வெற்றிகரமாக 10 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டுய்யதான அவர் கூறியுள்ளார். நோயாளி நலமுடன் இருப்பதாக விசேட வைத்தியர் சமந்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மருத்துவர்களின் மற்றுமொரு சாதனை: பெண்ணின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட 10 கிலோ எடையுள்ள கட்டி!
More from UncategorizedMore posts in Uncategorized »
- அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்டகால தீர்வு காண நடவடிக்கை
- புத்தகக் கொள்வனவுக்காக மாணவர்களுக்கு கொடுப்பனவு
- இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது – வடமராட்சியில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
- அறுகம்பே தாக்குதல் திட்டம்; மேலும் பலர் கைது
- தமிழ் தேசியம் பேசியவர்கள் கூட்டமைப்பை அழித்ததைவிட எதையும் செய்யவில்லை – மணிவண்ணன்
Be First to Comment