ஊர்காவற்றுறை – காரைநகர் இடையிலான கடல் பாதையை திருத்தியமைப்பதற்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உதிரிப்பாகங்கள்சில நாட்களுக்கு முன்னர் கொழும்பை வந்தடைந்த நிலையில், தற்போது யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
குறித்த கடல் பாதையின் திருத்தப் பணிகளை பூரணப்படுத்துவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடல் பாதை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் வரையில், கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது ஒழுங்குபடுத்தப்பட்ட படகுப் போக்குவரத்து சேவை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் .
Be First to Comment