தனது மனைவி ஜலனி பிரேமதாச தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சமூக சேவையில் ஈடுபட்டாலும் தமது குடும்ப உறுப்பினர்கள் எவரும் தீவிர அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
எனது மனைவியும் மற்றவர்களும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக சிலர் கூறுகின்றனர். எவ்வாறாயினும், எனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் அரசியலில் ஈடுபட மாட்டார்கள், ஆனால் சமூக சேவையில் ஈடுபடுவார்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் .
“கடந்த காலத்தில் நாட்டின் முதல் பெண்மணிகள் சமூக சேவையில் தீவிரமாகப் பங்குகொண்டார்கள். மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் மனைவியான காலஞ்சென்ற செல்வி எலினா ஜெயவர்த்தன சேவா வந்தித இயக்கத்தின் மூலம் சமூக சேவையில் ஈடுபட்டிருந்தார். என் அம்மாவும் சமூக சேவை இயக்கத்தில் பங்கு கொண்டிருந்தார். 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு அந்த இயக்கம் செயல்படவில்லை . எதிர்காலத்தில் சமகி ஜன பலவேகய (SJB) அரசாங்கம் சேவா வந்திதா இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்கும், இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் மனைவிகள் சமூக சேவையில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்ய முடியும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment