Press "Enter" to skip to content

திருகோணமலை வைத்தியசாலையில் இராணுவ வீரர் ஒருவரின் நெகிழ்ச்சி செயல்

திருகோணமலையில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த கண்பார்வை இழந்த நோயாளி ஒருவருக்கு அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இராணுவ வீரர் உணவு ஊட்டிய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை வைத்தியசாலையில் இராணுவ வீரர் ஒருவரின் நெகிழ்ச்சி செயல் | Trincomalee Hospital Army Soldier Fed The Patient

மஹதிவுல்வெவ – புபுதுபுர பகுதியில் வசித்து வரும் 67 வயதான அமரசிங்க என்பவர் பல ஆண்டுகளாக கண் பார்வையை இழந்து மனைவியை விட்டுப் பிரிந்து தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

குறித்த நபர் சுகயீனம் காரணமாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மல்லாவி, ஆலங்குளம் 17 CLI இராணுவ முகாமில் வசித்து வரும் 34 வயதான தனுஷ்க பியலால் திசாநாயக்க இராணுவ வீரர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

திருகோணமலை வைத்தியசாலையில் இராணுவ வீரர் ஒருவரின் நெகிழ்ச்சி செயல் | Trincomalee Hospital Army Soldier Fed The Patient

இந்த நிலையில் குறித்த நபரை பார்வையிடுவதற்காக வீட்டிலிருந்து வருவதற்கு தாமதம் ஏற்படுவதாகவும், இதனையடுத்து வைத்தியசாலை சிற்றூழியர்கள் கவனிப்பதைப் போன்று குறித்த இராணுவ வீரர் தமது தந்தைக்கு செய்யும் பணிவிடை போல குறித்த வயோதிபருக்கு பணிவிடை செய்து வருகின்றமை நோயாளர்கள் மத்தியிலும், வைத்தியசாலை நிர்வாகம் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர்கள் எதிர்காலத்தில் இன்னும் வளர வேண்டுமென இறைவனை பிரார்த்திப்பதோடு, இவ்வாறான செயற்பாடுகளை வரவேற்பதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *