பொது சுகாதார பரிசோதகர் எனக் கூறி மோசடி செய்த ஒருவரை ரம்புக்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று பிற்பகல் ரம்புக்கனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதுடைய திக்பிட்டிய, அரநாயக்க பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ரம்புக்கனை நகரில் உள்ள கடையொன்றுக்கு சென்று பொது சுகாதார பரிசோதகர் எனக்கூறி பணத்தை கோரியபோது கடையின் ஊழியர்கள் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பொது சுகாதார பரிசோதகராக வேடமிட்டவர் கைது!
More from UncategorizedMore posts in Uncategorized »
- வானிலையில் நாளை முதல் திடீர் மாற்றம்!
- சித்தன்கேணி இளைஞன் கொலை – ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் சாட்சியம்!
- மின்சாரம் தாக்கி இளைஞர் பலி! யாழில் பரிதாபம்
- உண்மைத்தன்மை இருக்குமாயின் அதனை நாம் வரவேற்போம் – ஈ.பி.டி.பியின் உடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!
- கல்லறைகளுக்கு மட்டும் ஒளியேற்றாமல் கனவுகளை சுமந்த மக்களுக்காக எமது மண்ணில் நிரந்தர ஒளியையும் ஏற்றவேண்டும் – ஈ.பி.டி.பி அழைப்பு!
Be First to Comment