ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சிகளுக்கும் இடையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், உரியமுறையில் செயற்படத் தவறிய, சில முக்கிய அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாற்றியமைப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுகாதார அமைச்சு மற்றும் ஊடகத்துறை அமைச்சு என்பன இதில் அடங்குவதாக அரசாங்கத்தரப்பு தகவல் ஒன்று கூறுகிறது.
முன்னதாக ஜனாதிபதிக்கும், பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினருக்கும் இடையிலான அண்மைய சந்திப்புகளில், புதிய பதவிகளை பொதுஜன பெரமுன கோரியுள்ளது.
எவ்வாறாயினும் தற்போதுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார இன்னல்களுக்கு மத்தியில் செயற்படக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப் பதவிகளை ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Be First to Comment