எலி காய்ச்சலுக்கு இணையான பாங்சூ எனப்படும் மிலியோய்டோசிஸ் நோய் நாட்டின் பல மாகாணங்களில் தற்போது பரவி வருவதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட இலங்கை மருத்துவ சபையின் தலைவர் இனோகா கொரேயா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நோயானது மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலும், வடமேல் மாகாணத்தில் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டத்திலும் தற்போது பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
Be First to Comment