Press "Enter" to skip to content

நித்திரை குழம்பிவிட்டதாம், 7 நாய் குட்டிகளை தீயில் போட்டுக் கொன்ற பாதகன்! யாழ்.தென்மராட்சியில் சம்பவம்..

தன்னுடைய நித்திரையை குழப்பியதாக கூறி 7 நாய் குட்டிகளை தீயில் எரித்துக் கொன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சாவகச்சேரி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் நாய் ஒன்றினை வளர்த்து வந்துள்ளார். அது சில தினங்களுக்கு முன்னர் 07 குட்டிகளை ஈன்றுள்ளது.

அந்த குட்டிகள் இரவு வேளைகளில் பாலுக்காக கத்தியுள்ளது. அதனால் இரவில் தன்னால் ஒழுங்கான முறையில் உறங்க முடியவில்லை என கூறி,

வீட்டில் ஒரு கிடங்கொன்று வெட்டி , அதனுள் குப்பைகளை போட்டு தீ மூட்டிய பின்னர் , 07 நாய் குட்டிகளையும் அந்த தீயினுள் போட்டு படுகொலை செய்துள்ளார்.

இது குறித்து யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி ஊடாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து ,

குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து , குற்றம் சாட்ட ப்பட்ட நபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *