யாழ்ப்பாணம் மாவட்டத்தில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர், அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும், மீற்றர் கட்டண வாசிப்புமாணியைப் பொருத்துவதற்கு முச்சக்கர வண்டி உரிமையாளர்களினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில், வினைத்திறனான சேவையை முன்னெடுத்தல் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேபோன்று, முச்சக்கர வண்டி தரிப்பிடம் மற்றும் தரிப்பிட பங்கீடு தொடர்பாக மாநகர சபை அதிகாரிகள் மற்றும் பொலிஸாருடன் கலந்துரையாடி சரியான வழிமுறைகளை பின்பற்றுவதற்கும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக, கடற்றொழில் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Be First to Comment