Press "Enter" to skip to content

சமூக வலைத்தள செயற்பாட்டாளர் நடாசா எதிரிசூரிய மீண்டும் விளக்கமறியலில்!

பௌத்த மதம் மற்றும் கலாசாரத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான சமூக வலைத்தள செயற்பாட்டாளர் நடாசா எதிரிசூரிய மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று கொழும்பு – கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அவரது கருத்தை யூ.ரியுப் தளத்தில் பதிவேற்றிய ப்ரூனோ திவாகரவை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

10 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் 50 ஆயிரம் ரூபாய்பெறுமதியான ரொக்க பிணையிலும் அவரை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்ட, ராஜாங்கனை சத்தாரதன தேரர் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *