Press "Enter" to skip to content

துப்பாக்கி வெடித்ததில் பாடசாலை மாணவன் பலி!

அம்பன்பொல ஆகரே பிரதேசத்தில் துப்பாக்கியொன்று இயங்கியதால் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அம்பன்பொல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் கெத்தபஹுவ, அம்பன்பொல பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஆவார்.

உயிரிழந்த சிறுவன் தனது தந்தை மற்றும் தாயுடன் ஆகரே பிரதேசத்தில் தென்னை பயிரிடும் காணிக்கு சென்றுள்ளார்.

அங்கு சிறுவனை நிறுத்திவிட்டு தாயும் தந்தையும் அருகில் உள்ள வயலுக்கு சென்றுள்ளனர்.

அப்போது, ​​சிறுவன் நின்றிருந்த பகுதியில் இருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதுடன், அங்கு சென்று பார்த்த போது மகன் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் விழந்து கிடந்துள்ளார்.

அவரின் அருகில் இருந்து குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கி தவறுதலாக வெடித்து இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *