யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், இன்று முதல் கண் சத்திர சிகிச்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் இல்லாத காரணத்தினாலும் சத்திர சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் இல்லாத காரணத்தினாலும் கடந்த 2 வருடங்களாக குறித்த சத்திர சிகிச்சையானது முன்னெடுக்கப்பட்டவில்லை.
இந்நிலையில் தற்போது கண் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் பதவியேற்றுள்ளார்.
இதன்காரணமாக, இன்று முதல் யாழ்ப்பாண வைத்தியசாலையில், கண் சத்திர சிகிச்சை மேற்கொளளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Be First to Comment