Press "Enter" to skip to content

சுதந்திர தினத்திற்கு எதிராக போராட்டம்:மன்றில் முன்னிலையாகாத பிரதிவாதிகளுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிராக கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி போராட்டம் நடத்தியமைக்கு எதிராக காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதற்கு யாழ்ப்பாண நீதிமன்றம் தீர்மானித்துள்ளதுடன் இன்றைய தினம் மன்றில் முன்னிலையாகாத பிரதிவாதிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்கள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மட்டுமே மன்றில் சமூகமளித்திருந்தார்.

ஏனைய பிரதிவாதிகள் மன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால் உத்தரவை வழங்க முடியாதுள்ளதாக நீதிவான் ஏ.ஆனந்தராஜா தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் தவணைக்கு வருகை தராத பிரதிவாதிகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலாதன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன், மற்றும் வேலன் சுவாமிகள் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *