இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் நீண்டகாலமாக புதிய மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதியுமான 66 வயதுடைய கனகசபை தேவதாசன் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
புறக்கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது, விடுதலை புலிகள் உறுப்பினருக்கு ஆதரவு வழங்கியதாக கூறப்படும் கனகசபை தேவதாஸனுக்கு 2017 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பியசேன ரனசிங்க 20 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கனகசபை தேவதாஸன், தன்னை விடுவிக்குமாறு கோரியும், தனது வழக்கிற்கான ஆதாரங்களை திரட்ட தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரியும் பல உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருந்தார். அத்துடன் தனக்காக தானே சில வழகு தவனைகளில் வாதாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment