Press "Enter" to skip to content

மீண்டும் குறையவுள்ள சமையல் எரிவாயு விலை

எதிர் வரும் ஜூலை மாதம், நான்காவது முறையாகவும் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இறுதியாக 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3,186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1281 ரூபாவாக விற்பனையாகிறது.

அத்துடன் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டு 598 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *