கம்பஹா – மீரிகமை பிரதேசத்தில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய எஸ்.ஆர்.அனுருத்த என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காணி விவகாரம் தொடர்பில் அயல் வீட்டாருடன் இடம்பெற்ற மோதலின் போது அவர் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அயல் வீட்டில் வசிக்கும் இருவரை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment