பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல புலமைப்பரிசில் உதவிக்காக பணம் விடுவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் தலையீட்டின் ஊடாக மஹபொல புலமைப்பரிசில் உதவிக்காக அரசாங்கம் 3,100 இலட்சம் ரூபாவை மஹபொல நம்பிக்கை நிதியத்திலிருந்து விடுவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 2 மாதங்களுக்கான உதவித்தொகையாக மாணவர்களின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Be First to Comment