Press "Enter" to skip to content

வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி..! இலங்கையில் ஏற்படப்போகும் காலநிலை மாற்றம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கை மற்றும் தென் தமிழக பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வரை ஏற்படக்கூடி காலநிலை மாற்றங்கள் தொடர்பில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என கணிக்கப்படுகின்றது.

இந்த சூறாவளிக்காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

29.06.2023 முதல் 01.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர், வால்பாறை தாலுகா அலுவலகம்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), பண்ருட்டி (கடலூர்) தலா 2, ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), சேத்தியாதோப்பு (கடலூர்), கடலூர், சோலையார் (கோயம்புத்தூர்), சோளிங்கர் (ராணிப்பேட்டை), கூடலூர் பஜார் (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 1 சென்டிமீட்டர் அளவில் மழை பதிவானது.

வங்கக்கடல் பகுதிகளில் இன்று (27.06.2023) தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

29.06.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

30.06.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

01.07.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் இலட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

29.06.2023 முதல் 01.07.2023 வரை: இலட்சத்தீவு பகுதிகள், வடக்கு கேரள-கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் கடற்றொழிலாளர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *