வார இறுதியில் வாக்னர் ஆயுதக்குழு ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் பின்னர், முதன் முதலாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் பொது நிகழ்வொன்றில் இன்று உரையாற்றியுள்ளார்.
‘வருங்கால பொறியியலாளர்கள்’ என அழைக்கப்படும் இளைஞர் மன்றத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் அவர் உரையாற்றியுள்ளார்.
தமது உரையின் போது பாரிய வெளி சவால்களை எதிர்கொள்வதற்கு உதவு ஒத்தாசை வழங்கியவர்களுக்கு அவர் தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தவிர, ரஷ்யாவின் நிலையான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக முன்னிலையில் கடமையாற்றியவர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டியவர்கள் எனவும் ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Be First to Comment