Press "Enter" to skip to content

இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்து!

அடுத்த ஹஜ் பண்டிகையின் போது பொருளாதார மற்றும் சமூக சிக்கல்களில் இருந்து முழுமையாக விடுபட அனைவரின் பங்களிப்பும், பங்கேற்பும் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.

உலகளாவிய முஸ்லிம்களுக்கு விடுத்துள்ள புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மிகவும் கடினமான காலகட்டத்திற்குப் பிறகு, புதிய எதிர்பார்ப்புகளுடன் எதிர்காலத்திற்காக நாம் முயற்சிக்கும் தற்போதைய நிலையில், 2023 ஆம் ஆண்டு ஹஜ் பண்டிகை முன்னெப்போதையும் விட மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது எனவும், மக்களை சிரமத்தில் இருந்து மீட்பதற்கு எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் முன்வந்து அதற்கு தீர்வு காணும் மனிதாபிமான பணியில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும் திருப்தியையும் ஹஜ் பண்டிகை பிரதிபலிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஹஜ் பண்டிகையின் போது பொருளாதார மற்றும் சமூக சிக்கல்களில் இருந்து முழுமையாக விடுபட அனைவரின் பங்களிப்பும், பங்கேற்பும் மிகவும் முக்கியமானது.

பிராந்திய மற்றும் உலகளாவிய இலக்குகளை அடைவதற்கான பொதுவான நோக்கத்தில் கைகோர்க்க ஹஜ் பண்டிகையின் போது உங்களை அழைக்கிறேன்.

எதிர்வரும் ஹஜ் பெருநாள் அனைத்து இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் உலகளாவிய முஸ்லிங்களுக்கும் மகிழ்ச்சியான பண்டிகையாக அமைய பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *