போதைப் பொருளை விற்பனை செய்யும் அண்ணனிடம் போதைப் பொருள் வாங்க வந்தவருடன் தங்கை வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் யாழிலில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, போதைப் பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் தினமும் தனது நண்பருடைய வீட்டில் போதைப் பொருளை பெற்று வந்துள்ளார்.
இவ்வாறு தொடர்ச்சியாக போதை பொருளை பெற்று வந்த நிலையில் நண்பனுடைய தங்கையின் மீது போதைப் பொருள் வாங்க சென்றவருக்கு காதல் மலர்ந்தது.
நெடு நாட்களாக மலர்ந்த காதல் காரணமாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சுமார் 15 வயது மதிக்கத்தக்க தங்கை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இளவாலை பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment