யாழ்ப்பாணம், பலாலி – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக் காணியை சுவீகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதனைத் தடுத்து நிறுத்தி எமது மண்ணைப் பாதுகாக்க அனைவரும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
காணி சுவீகரிப்புக்கு எதிராக நாளை மறுதினம் போராட்டம் நடத்தவுள்ளதாகவும், எமது மண்ணை பாதுகாக்க அனைவரும் அணிதிரள வேண்டுமெனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ், அழைப்பு விடுத்துள்ளார்.
Be First to Comment