கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் காணமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023 (கலை) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த மாணவியே இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோகத்தில் குடும்பத்தினர்
சம்பவத்தில் புவனேஸ்வரன் ஆர்த்தி எனும் மாணவியே கடந்த 05/08/2023 இல் இருந்து காணாமல் போயுள்ளார்.
மாணவி காணமல் போனமை தொடர்பில் கடந்த மாதம் 08 திகதி பொலிஸில் முறைப்பாடு வழங்கபட்டுள்ளபோதும் இதுவரை மாணவி கண்டு பிடிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் மாணவி தொடர்பில் தகவல் எதுவும் தெரியாத்ததால் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.
மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அல்லது இவரை இலங்கையின் எப்பிரதேசத்திலாவது கண்டவர்கள் இருந்தால் உடனடியாக 0774941522. 0772144553 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிய தருமாறு மிக மனவருத்தத்துடன் தந்தை கேட்டுள்ளார்.
Be First to Comment