வேலணை, சாட்டி கடற்கரை பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியில் கடல் பாசி சேகரிக்கும் தொழிலில் ஈடுபடுகின்ற பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
வருடம் தோறும் பங்குனி – புரட்டாதி வரையான காலப்பகுதியில் உருவாகின்ற கடல் பாசியை சேகரிக்கும் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு சுமார் 40 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் கடல்பாசி சேகரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக பிரதேச மக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடினார்.
There’s certainly a lot to learn about this issue. I like
all the points you’ve made.