பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி மீள அழைப்பதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபாய் நிதியை ஹெலோகோப் நிறுவனத்தில் முதலீடு செய்தமை ஊடாக பண மோசடி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்து.
இந்த விசாரணை தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த முறைப்பாட்டை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி மீண்டும் அழைத்து உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
Be First to Comment