Press "Enter" to skip to content

சூரியனை நெருங்கும் ஆதித்யா எல்-1

சூரியனை ஆராயவுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2ஆம் திகதி பி.எஸ்.எல்.வி சி-57 ரொக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த விண்கலத்தின் முதல் சுற்றுவட்டப்பாதை கடந்த 3 ஆம் திகதியும் இரண்டாவது சுற்றுவட்டப்பாதை கடந்த 5ஆம் திகதியும் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டன.

இந்த நிலையில் 3வது முறையாக சுற்றுவட்டப்பாதை கடந்த 10ஆம் திகதி அதிகாலை உயர்த்தப்பட்டது.

3 கட்டங்களை வெற்றிகரமாக கடந்த ஆதித்யா எல்-1 விண்கலத்தின் 4வது சுற்றுவட்டப்பாதையை உயர்த்துவதற்கான கட்டளைகள் பெங்களூர் மற்றும் மொரீசியஸில் இருந்து அனுப்பப்பட்டன.

இந்த புதிய சுற்றுவட்டப்பாதை குறைந்தபட்சம் 256 கிலோமீட்டரும்,அதிகபட்சம் 1,21,973 கிலோமீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக புவி வட்டப்பாதையில் இருந்து Trans-Lagragean Point 1புள்ளிக்கு அனுப்பும் இறுதிகட்ட பணிகள் எதிர்வரும் 19ஆம் திகதி காலை 2 மணிக்கு நடக்கும் என்று இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *