Press "Enter" to skip to content

முல்லைத்தீவு தண்ணீர்முறிப்பு மீனவ மக்கள் 141 பேருக்கு வயல் காணி வழங்க நடவடிக்கை… புதிய மீனவ கிராமம்…

 

கடற்றொழில் அமைச்சர்
கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள், சமீபத்தில் நடைபெற்ற அத்துமீறி மீன்பிடித்தல் பிரச்சனை, வள்ளங்கள் தீ வைப்பு, பொலிசாரின் கைது நடவடிக்கை என பல பிரச்சனைகள் தொடர்பாக நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்,
உதவி மாவட்ட அரசாங்க அதிபர்,
ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,
நன்னீர் மீன்பிடி அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் குறித்த இடத்திற்கு வருகை தந்தனர்.

அப்போது, மீன்பிடி இல்லாத காலத்தில் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் கஷ்டப்படுவதாக மீனவர்கள் தெரிவித்ததையடுத்து, 141 வயல்காணி துண்டுகளை வனவளத் திணைக்களத்திடமிருந்து விடுவித்து மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை கெளரவ அமைச்சர் நடவடிக்கை எடுத்தார்.

அத்துடன்…
குறித்த பகுதியில், விரைவில் மீனவர் கிராமம் ஒன்றினை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *