யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 09 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மயிலங்காடு பகுதியில், கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக இளைஞன் ஒருவர் மீது கடந்த ஜனவரி மாதம் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் புதன்கிழமை (13) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Be First to Comment