கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று16-09-23 இடம் பெற்ற விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சிமாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞர்களே இந்த விபத்தினை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்தினை ஏற்படுத்திய வாகனம் தப்பிச் சென்றுள்ளது.இந்த விபத்தின் போது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில் அங்கு சென்ற ஏனைய இளைஞர்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து தொடர்பில் பூநகரி போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்று வருகின்றது.

கிளிநொச்சி பூநகரி கோர விபத்தில் இளைஞன் பலி!!
More from UncategorizedMore posts in Uncategorized »
- கொழும்பு பல்கலை. சட்டபீடத்திற்கு தெரிவான மலையக மாணவி!
- தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே தரைவழிப் பாலம் – ஆய்வு நடைபெற்று வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவிப்பு!
- ஜனாதிபதி முன்வைத்த யோசனை!
- வளிமண்டல தளம்பல்: கடும் காற்று, கடல் கொந்தளிப்பு, புயல் தொடர்பில் எச்சரிக்கை
- நகை அடகு வைத்தே சட்டத்தரணிக்கு20 ஆயிரம் ரூபாவை வழங்கினோம்! கைதான இளைஞனின் பெற்றோர்,
Be First to Comment