என் மீள் அரசியல் பிரவேசம் சிலருக்குச் சவாலாக இருக்கக்கூடும் என்பதால் பல்வேறு விதமான வதந்திகள் தற்போது வெளியாகின்றன என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நான் மீண்டும் அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என்பது தொடர்பில் இப்போதைக்குப் பதில் கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் அரசியலில் கோட்டாபய
கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளார் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் வேட்பாளராகக் களமிறங்கவுள்ளார் எனவும் செய்திகள் வெளிவந்திருந்தன.
இது தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில், என் மீள் அரசியல் பயணத்தைப் பற்றி நான் தான் முடிவெடுக்க முடியும். அதில் வேறு எவரும் தலையிட முடியாது.
Be First to Comment