புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள தென்னங்காணி ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 16-09-23 இன்று காலை குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு கோம்பாவிலைச் சேர்ந்த 29 வயது இளைஞன் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து காணவில்லையென கடந்த 15 ஆம் தேதி உறவினர்களால் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என்ற 29 வயது இளைஞனே காணாமல் போய் உள்ளதாக நேற்றைய தினம் 15-09-23 உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் போன இளைஞன் இன்று 16-09-23புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனைக்கு அருகில் உள்ள தென்னங்காணி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆன நிலையில் குறித்த உடலும் இனங்காணப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் 29 வயது சுதர்சன் சடலமாக தென்னம்காணியில்ருந்து மீட்பு!!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment