யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் ரக போதைப் பொருளுடன், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வான் ஒன்றில் பயணித்த நிலையில் விசேட அதிரடி படையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரிடம் இருந்து ஒரு கிலோ 40 கிராம் ஐஸ் ரக போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 70 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Be First to Comment