Press "Enter" to skip to content

தலையில் மரக்கிளை விழுந்ததில் பாடசாலை மாணவி உயிரிழப்பு!

உந்துருளியின் பின்னால் அமர்ந்து சென்ற பாடசாலை மாணவியின் தலையில் மரக்கிளை விழுந்ததில் அந்த மாணவி உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை – தவலந்தன்ன வீதியின் பூண்டுலோயா, பலுவத்த பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்கரபத்தனை பம்பரகலை பகுதியில் வசித்து வந்த விஜயராஜ் திவ்யராணி என்ற 17 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தனது தந்தையுடன் அக்கரபத்தனை பகுதிக்கு உந்துருளியில் திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *