தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் கட்டப்பட்டுள்ள இந்திய ரூபா .79.70 கோடி மதிப்பில் 1591 புதிய வீடுகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி செவலூரில் ரூ.3.11 கோடி மதிப்பில் 62 வீடுகள், அனுப்பன்குளம் மையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் 8 வீடுகள், குல்லூர்சந்தை மையத்தில் ரூ.3.51 கோடி மதிப்பில் 70 வீடுகள் என மொத்தம் ரூ.7.2 கோடி மதிப்பில் 140 வீடுகள் திறந்து வைக்கப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சி சிவகாசி செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் நடந்தது.
மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
பின்னர் புதிய வீடுகளை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி புதிய வீடுகளுக்கான சாவியினையும், 8 வகையான வீட்டு உபயோக பொருட்க ளையும் பயனாளிகளுக்கு வழங்கினார்.
Be First to Comment