யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் நேற்று (17) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கிளிநொச்சி கோணவிலில் உள்ள தனது வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வசந்த குமார் டிலக்சியா என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யுவதி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த போது, அதனை பார்த்த அவரது சகோதரர் உடனடியாக அவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிப்பதற்குள் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இறப்பிற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment