களனி பகுதியில் வயோதிப பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று அதிகாலையில் பதிவாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
களனி – வராகொடை வீதியில் வசிக்கும் 73 வயதுடைய வயோதிப பெண்ணே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
திடீரென வீட்டிற்குள் பிரவேசித்த நபர் ஒருவர் கத்தியை காண்பித்து அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதோடு குறித்த பெண் அணிந்திருந்த தங்க மாலையையும் அபகரித்து சென்றுள்ளார்.
குறித்த நபரை கைது செய்வதற்கு காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment