Press "Enter" to skip to content

தியாக தீபம் திலீபன் கட்சி அரசியலுக்காக குத்தகை எடுக்கப்பட்டுள்ளார்: சி.வி.கே சிவஞானம் குற்றச்சாட்டு

தியாக தீபம் திலீபனை சிலர் தமது கட்சி அரசியலுக்காக குத்தகைக்கு எடுத்து திருகோணமலையில் அடி வாங்க வைத்துள்ளமை மன வேதனை அளிப்பதாக வட மாகாண சபை அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் கவலை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (23.09.2023) சனிக்கிழமை, இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

தியாக தீபம் திலீபன் நினைவிடம்

 

மேலும் தெரிவிக்கையில், 1988 ஆம் ஆண்டு நல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவிடத்தை என்னுடைய பணத்தின் மூலம் நிர்மாணிக்க ஆரம்பித்து 1989 ஆம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்தேன்.

 

தியாக தீபம் திலீபன் கட்சி அரசியலுக்காக குத்தகை எடுக்கப்பட்டுள்ளார்: சி.வி.கே சிவஞானம் குற்றச்சாட்டு | Cvk Shivajnanam Blame Selvarajah Kajendren

அப்போது இருந்த மாநகர சபை பணியாளர்கள் சரீர உதவிகளை வழங்கிய நிலையில் இரண்டாவது அபிவிருத்திப் பணிக்காக கூட்டுறவு சங்கத்தினர் பண உதவிகளை வழங்கிய நிலையில் அதில் என்னுடைய பணத்தையும் செலவழித்தேன்.

தற்போது சிலர் கட்சி அரசியலுக்காக திலீபனை குத்தகைக்கு எடுத்து இருவருடன் திருகோணமலைப் பகுதியில் அடி வாங்க வைத்தமையை ஊடகங்கள் ஊடாகப் பார்த்தேன்,  திலீபன் அடி வாங்கும் போது இருவர் மட்டும் வாகனத்தில் இருந்தவை அவதானித்தேன். ஒருவர் மஞ்சள் உடை அணிந்திருந்தார் ஒருவர் கறுப்பு உடை அணிந்திருந்தார்.

 

தியாக தீபம் திலீபன் கட்சி அரசியலுக்காக குத்தகை எடுக்கப்பட்டுள்ளார்: சி.வி.கே சிவஞானம் குற்றச்சாட்டு | Cvk Shivajnanam Blame Selvarajah Kajendren

பின்பு மாஞ்சள் உடை அணிந்த வரை கீழே வைத்துத் தாக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தான் என அறிந்து கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரனை தாக்கியது தவறு என ட்விட்டரில் பதிவிட்டிருந்தேன். ஏனெனில் படித்த சிங்கள மொழி பேசுபவர்கள் அறிய வேண்டும் என்பதற்காக.

கட்சி அரசியல்

பொத்துவில் தொடக்கம் பொலிக்காண்டி வரை இடம்பெற்ற போராட்டம் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி அதிக எண்ணிக்கையானவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. இதன் காரணமாக குழப்ப வந்தவர்களும் குழப்பமால் சென்றார்கள்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *