அரசியல் செல்வாக்கு இல்லாமல் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டால் போதும் என்றும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையில்லை என்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நேற்று (24) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அம்பிலிப்பிட்டி புனித மிக்கேல் தேவாலயத்தில் பொன்விழா கொண்டாட்டம் அருட்தந்தை தலைமையில் இடம்பெற்றது.
அங்கு பேசிய பேராயர் ;-
“தலைவர்கள் விசாரணைக்கு தலைமை தாங்கினால், அவர்கள் நேர்மையாக செயல்பட்டால், அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், எவரையும் பாதுகாக்காமல், உண்மையில் என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிய முயற்சிகளை மேற்கொண்டால், எங்களுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை. இதையெல்லாம் வெளிப்படையான முறைகள் மூலம் செய்யுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்
Be First to Comment