அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அதிரடி நடவடிக்கையால் கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள சட்டவிரோத மண் கடத்தல் மீண்டும் மணல் வினியோக தேவையின் முக்கியம் கருதி காலை ஆறு தொடக்கம் மாலை ஆறு மணிவரை அனுமதி..
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற
சட்டவிரோதமாக மண் கடத்தல்களை கட்டுப்படுத்த கடந்த 16 ம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக இரண்டு வாரகாலமாக இடைநிறுத்தி வைக்கப்பட்ட மணல் வினியோகம் துறைசார் தரப்பினரின் ஒருங்கிணைந்த துரித நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அந்த நடவடிக்கை வெற்றியளித்துள்ள நிலையில் தற்சமயம் மணல் வினியோக விடயத்தில் ஏற்பட்டுள்ள அவசியம் கருதி இன்றைய தினம் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் எதிர் வரும் (02.10.2023) திங்கட்கிழமை முதல் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை அனுமதி வழங்கப்பட்ட மண் வினியோகம் இடம்பெற சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .
Be First to Comment