கன மழையை தொடர்ந்து பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
September 27, 2023 09:58 pm
தற்போது பெய்து வரும் கனமழையால் பல ஆறுகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது.
நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி பானந்துகம பிரதேசத்தில் இருந்து நில்வளா ஆற்றின் நீர் மட்டம் சிறியளவிலாள வௌ்ளப்பெருக்கு நிலைமை எட்டுள்ளது.
நிலைமை மேலும் அதிகரித்து வருவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தலகஹகொட பிரதேசத்தில் உள்ள நில்வளா ஆற்றின் நீர் மட்டம் அவதான மட்டத்தை எட்டுள்ளது.
இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டமும் கனமழை காரணமாக அதிகரித்து வருகிறது.
கிங் கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதுடன், பத்தேகம, தவலம பிரதேசங்களில் அவதான மட்டத்தை எட்டுள்ளது.
களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் நீர் மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
Be First to Comment