தெல்தெனிய வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட 18 வயதுடைய இளைஞன் தொலைபேசிக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அலைபேசியை கைப்பற்றியதையடுத்து கத்தியை எடுத்து தனது உடலின் பல பாகங்களை வெட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன உளைச்சலுக்கு ஆளான இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பன்வில கந்தேகும்புர பிரதேசத்தை சேர்ந்த ஹர்ஷன லக்ஷான் தில்ருக்ஷ (வயது 18) என்ற இளைஞனே இவ்வாறு உயிரை மாய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஒரு நாளைக்கு 18 மணித்தியாலங்களை அலைபேசியுடன் தனியாக செலவிடுவதுடன் தொடர்பு இல்லாமல் நேரத்தை கடத்துவதற்காக பல்வேறு வீடியோ கேம்களுக்கு அடிமையாகியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
அவ் இளைஞன் தனது பெற்றோருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்ததாகவும் அக்கடிதத்தில் தனது பெற்றோரை கடுமையாக குற்றம் சுமத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெல்தெனிய வைத்தியசாலை நிர்வாகத்திற்கு கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சேனகக்க தலகல பணித்திருந்தார்.

கையடக்க தொலைபேசி பாவனையால் உயிரிழந்த இளைஞர்!
More from UncategorizedMore posts in Uncategorized »
- வானிலையில் நாளை முதல் திடீர் மாற்றம்!
- சித்தன்கேணி இளைஞன் கொலை – ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் சாட்சியம்!
- மின்சாரம் தாக்கி இளைஞர் பலி! யாழில் பரிதாபம்
- உண்மைத்தன்மை இருக்குமாயின் அதனை நாம் வரவேற்போம் – ஈ.பி.டி.பியின் உடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!
- கல்லறைகளுக்கு மட்டும் ஒளியேற்றாமல் கனவுகளை சுமந்த மக்களுக்காக எமது மண்ணில் நிரந்தர ஒளியையும் ஏற்றவேண்டும் – ஈ.பி.டி.பி அழைப்பு!
Be First to Comment