முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜாவின் ராஜினாமாவை முழுமையாக விசாரிக்க வேண்டியதன் அவசியத்தை, சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை உறுதிசெய்வதற்காக, இலங்கையின் முக்கிய சட்ட வழக்கறிஞர்கள் குழுவான சட்டத்தரணிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜாவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி அவர் பதவி விலகியுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் கவலையடைவதாக சட்டத்தரணிகள் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான விஷயங்களில் கடுமையான தாக்கங்கள் இருப்பதால், சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்ற தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுடன் இந்த விவகாரம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய விசாரணையின் முடிவுகளை தாமதமின்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரியன்சி அர்செகுலரத்ன, உபுல் ஜயசூரிய, கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, ஜெப்ரி அழகரத்தினம், டினல் பிலிப்ஸ், துலிந்திர வீரசூரிய, அனுர மெத்தேகொட, சாலிய பீரிஸ், எஸ்.டி. ஜயநாக, சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மற்றும் சட்டத்தரணி
கே.டபிள்யூ. ஜனரஞ்சன அந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளார்

சுதந்திர விசாரணைக்கு கோரூம் சட்டத்தரணிகள் சங்கம்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment