வாடகை அடிப்படையில் வீடு ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருந்த நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ஹொரணை, பண்டாரவத்தை, பொக்குனுவிட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (30) மாலை இந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் பெத்திகமுவ கந்த, ஹல்தொட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment