Press "Enter" to skip to content

இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜினாமா

இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் இன்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்  கஞ்சன விஜேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

14 மாதங்களுக்கு முன்னர் மிகவும் சவாலான காலக்கட்டத்தில் பதவியை ஏற்ற தனது அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அமைச்சர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *