Press "Enter" to skip to content

தமது மரப் பால் சியெட் களனியில் உற்பத்தியாக மாறுவதை கண்டுகளித்த இறப்பர் செய்கையாளர்கள்

தமது இறப்பர் மரங்களில் இருந்து பெறப்பட்ட வெண்ணிற மரப்பால் டயராக மாறும் விதத்தை இறப்பர் செய்கையாளர்கள் கண்டு களித்தனர். அதி உயர் தொழில்நுட்பத்தின் மூலம் மிக நவீன இயந்திரங்கள் மூலம் இடம்பெறும் இந்த செயற்பாடு உலக சந்தைக்குத் தேவையான முடிவுப் பொருளாக மாறுவது அவர்கள் நிச்சயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால் அதை அவர்கள் பெரும்பாலும் நேரடியாகக் கண்டதில்லை. இந்தக் குறையை இப்போது இலங்கையின் இயற்கை இறப்பரை பெருமளவு பயன்படுத்தும் ஒரு பிரிவினர் சரி செய்து வருகின்றனர்.

இலங்கைக்குத் தேவையான வாயு மூல டயர்களில் அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதியை உற்பத்தி செய்யும் சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் களனியிலுள்ள தனது விரிவான உற்பத்தி தொகுதிக்கு இறப்பர் செய்கையாளர்கள் நேரடியாக விஜயம் செய்து உற்பத்தி செயற்பாடுகளைப் பார்வையிடும் வகையில் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து வருகின்றது. உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சந்தைக்கு தேவையான அதி செயற்திதன் மிக்க டயர்களை உற்பத்தி செய்யும் உள்ளக செயற்பாட்டு பொறிமுறையை பார்வையிடும் வாய்ப்பு இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கப்பெறகின்றது. அந்த வகையில் பாதுக்க, ஹொரணை, அவிஸ்ஸாவலை, எஹலியகொட, இரத்தினபுரி, அக்குரஸ்ஸ, கேகாலை, யட்டியாந்தொட்டை, கோணகல்தெனிய, றுவன்வெல்ல ஆகிய இடங்களைச் சேர்ந்த 45 பேர் கொண்ட முதலாவது குழு இறப்பர் செய்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சியெட் களனி தொழில்சாலைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டனர். அவர்களுக்கு இயற்கை இறப்பர் உற்பத்தி தொடர்பான விரிவான விளக்கம், இறப்பர் தரம் தொடர்பாக நடத்தப்படும் கண்டிப்பான பரிசோதனைகள், விலைமதிப்பு மிக்க மூலப் பொருளை களஞ்சியப் படுத்தி வைப்பதில் பேணப்படும் தீவிர கவனம், கையிருப்பு முகாமைத்துவத்தில் பேணப்படும் முதலில் வருவது முதலில் வெளியெறுவது (FIFO) பற்றிய நடைமுறை மற்றும் ஆரம்பம் முதல் உறபத்தி முடிவு வரையான முழு செயற்பாடுகள் பற்றி விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அதி நவீன வசதிகள் கொண்ட உற்பத்தி வளாகத்தில் தர சோதனை செயற்பாடுகள் பற்றி வழங்கப்பட்ட விரிவான விளக்கம் உயர் தரம் மிக்க இயற்கை இறப்பர் விநியோகத்தின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *