Press "Enter" to skip to content

கொழும்பு மயூராபதி ஆலயத்தில் மஹிந்த விசேட வழிபாடு

கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை (06) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட வழிபாட்டில் ஈடுபட்டார்.

வழிபாட்டின் பின்னர் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய மஹிந்த ராஜபக்ச,

கொழும்பு மயூராபதி ஆலயத்தில் மஹிந்த விசேட வழிபாடு | Mahinda Special Worship At Mayurapati Temple

மக்கள் ஏற்று கொள்ளும் உறுப்பினருக்கு தலைமைத்துவம்

மக்கள் எதிர்பார்க்கும் தலைவருக்கு தமது அணி தலைமைத்துவத்தை வழங்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். ‘நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் வகையிலான தலைவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்துக்கு தெரிவு செய்யப்படுவார்.

கொழும்பு மயூராபதி ஆலயத்தில் மஹிந்த விசேட வழிபாடு | Mahinda Special Worship At Mayurapati Temple

எமது அணியில் இளைஞர் அணியினர் பலரும் உள்ளனர். எதிர்காலத்தில் அவர்களுக்கு ஆதரவை வழங்கி முன் கொண்டு செல்ல எதிர்பார்க்கிறோம்.

அத்துடன் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் வகையிலான சிரேஷ்ட பிரஜை ஒருவருக்கு கட்சி தலைமைத்துவத்தை வழங்க எதிர்பார்க்கிறது.

கொழும்பு மயூராபதி ஆலயத்தில் மஹிந்த விசேட வழிபாடு | Mahinda Special Worship At Mayurapati Temple

மக்கள் ஏற்று கொள்ளும் உறுப்பினருக்கு தலைமைத்துவம் வழங்கப்டவுள்ளதாக தெரிவித்த மஹிந்த, மக்களே எனக்கும் தலைமைத்துவத்தை வழங்கினார்கள் என்றும் எதிர்காலத்திலும் அவ்வாறே இடம்பெறும் எனத் தெரிவித்தார்.

கொழும்பு மயூராபதி ஆலயத்தில் மஹிந்த விசேட வழிபாடு | Mahinda Special Worship At Mayurapati Temple

அதேவேளை நீண்ட காலமாக பொதுவிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்த முன்னாள் ஜனாதிபதி , தற்போது நாட்டின் பல்வேறு வணக்கஸ்தலங்களுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *