கொள்ளுப்பிட்டியில் முறிந்து வீழ்ந்த மரம் அகற்றப்பட்டதன் பின்னர் டுப்ளிகேஷன் வீதி மக்கள் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
(செய்திப் பின்னணி – October 6, 2023 07:57 am)
கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற பேருந்து விபத்து காரணமாக, டுப்ளிகேஷன் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கொழும்பில் இருந்து தெனியா நோக்கி பயணித்த பஸ் மீது கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் இன்று (06) அதிகாலை மரம் முறிந்து விழுந்ததில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் படுகாயமடைந்தவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
Be First to Comment