Press "Enter" to skip to content

முள்ளியவளையில் முக்கிய போதை மாத்திரை வியாபாரியான 20 வயது இளைஞன் கைது.!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட தண்ணீரூற்று,மாமூலை, முள்ளியவளை, பூதன்வயல், கணுக்கேணி, நீராவிப்பிட்டி பகுதிகளில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.இவ்வாறு இளைஞர்கள் பலர் பொலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றாலும் முக்கிய வியாபாரிகளை பொலீசாரால் கைது செய்ய முடியாமல் போகின்றது.இந்த நிலையில் முள்ளியவளை பகுதியில் முதன்மையாசெயற்பட்டு வந்த போதைப்பொருள் வியாபாரம் செய்து வரும் இளைஞன் ஒருவரை விமானப்படையின் புலனாய்வாளர்கள் கைதுசெய்துள்ளார்கள்.இந்த சம்பவம் 06.10.23 அன்று இடம்பெற்றுள்ளது.20 அகவையுடைய முள்ளியவளையினை சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரது சகோதரர் ஒருவர் கடந்த காலங்களில் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 34 மில்லிக்கிராம் ஜஸ் வகை போதைப்பொருளும், 486 கொக்கேன் வகையான மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.முள்ளியவளையில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருட் பாவனையினை கட்டுப்படுத்துவதில் பொலீசார் அக்கறையின்மை காட்டிவருவதாக மக்கள் குற்றாம் சாட்டியுள்ளார்கள்.
பொலீசாரின் பக்கசார்பான நடவடிக்கைகள் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.இந்த நிலையில் கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள விமானப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் 06.10.23 அன்று இந்த கைது நடவடிக்கையினை மேற்கொண்டு கைதுசெய்யப்பட்ட நபரையும் சான்று பொருட்களையும் முள்ளியவளை பொலீசாரிடம் பாரப்படுத்தியுள்ளார்கள்.07.10.2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *